கடன் தொல்லை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலி நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன். இவருக்கு இரண்டு மகள்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாகப்பட்டினத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடி வந்ததாக கூறப்படுகிறது. ராமகிருஷ்ணன் நகைப்பட்டறையில் வேலை பார்த்து வந்த நிலையில், கடன் தொல்லையால் தவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு தனது இரண்டு மகள்களுக்கும் மனைவிக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்வதற்கு முன்பாக தனது உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உறவினர் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்த நிலையில், அவர்கள் சென்று பார்த்த போது மனைவி, இரண்டு மகள்கள் இறந்த நிலையில் ராமகிருஷ்ணன் மட்டும் உயிருக்கு பேராடியுள்ளார்.
அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
No comments