துபாயில் நாசா விஞ்ஞானி அந்தோணி ஜீவராஜனுடன் கேப்டன் தொலைக்காட்சி. புதுவை ஸ்டார் தொலைக்காட்சி வளைகுடா முதன்மை நெறியாளர் kamalkvl நேர்காணல்
துபாய் ஐக்கிய அரபு அமீரக துபாய்க்கு வருகை தந்துள்ள நாசா விஞ்ஞானி டாக்டர் ஆண்டனி ஜீவராஜனுடன் முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல் நேர்காணல் செய்தார். விஞ்ஞானி டாக்டர் ஆண்டனி ஜீவராஜன் தற்போது நாசா ஜான்சன் விண்வெளி மையத்தில் மனித உடல்நலம் மற்றும் செயல்திறன் (HH&P) இயக்குநரகத்தின் கீழ் உயிரி மருத்துவ ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் (BRES) பிரிவின் துணைப் பிரிவுத் தலைவராக பணியாற்றுகிறார். மேலும் இது பயோமெடிக்கல் ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவு மனித ஆய்வு விண்வெளிப் பயணத் திட்டங்கள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் செயல்பாட்டுச் செயல்பாடுகளைச் செய்கிறார் குறிப்பிடத்தக்கது.
இந்த நேர்காணல் ஷேக் சாயத் சாலையில் உள்ள லத்திபா டவரில் உள்ள Bakertilly Law Corporation நிறுவனத்தின் நிறுவனர் அர்ஷாத் மாலிம் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நேர்காணலில் பல்வேறு ஊடகவியர்லர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நேர்காணலில் பல்வேறு விதமான தகவல்கள் பற்றி விவாதிக்கப்பட்டன அதில் செவ்வாய் கிரகத்திற்கு இந்தியாவில் இருந்து ஆட்கள் அனுப்பப்படுமென்றும் அதற்கான உதவிகளை நாசா மூலம் தான் மேற்கொள்ளுவதாக கூறியதை மேற்கோள்காட்டி அதன் விவரங்களை நமது நெறியாளர் கமால் கேவிஎல் கேட்டறிந்தார் . இதுபற்றி விஞ்ஞானி கூறும்போது தற்போது Biotical Agreement ஏற்பட்டிருப்பதை மேற்கோள்காட்டி அதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அப்படி மேற்கொள்ளும்பட்சத்தில் நான்கு நபர்கள் (பைலட், டாக்டர், என்ஜினீயர் மற்றும் விஞ்ஞானி) அதற்கு தேர்வுசெய்யப்பட்டு அனுப்பப்படுவார்கள். அப்படி அனுப்படும்போது அதன் போய்சேரும் தூரம் அருகே அருகே இருக்கும்போது 6 என கணக்கிட்டாலும் திரும்ப வரும்போது அதன் தூரம் அதிகரித்துவிடுவதால் போகும் நேரத்தைவிட திரும்ப வரும் தூரம் 2 வருடத்தில் இருந்து 3 வருடங்கள் கூட அதிகரிக்கலாம் என பலவாறு விவரங்களை கூறி விளக்கமளித்தார். அதுமட்டுமல்லாமல் செவ்வாய் கிரகத்தில் இடம் வாங்குவது, அதில் மனிதன் வாழக்கூடிய கூறுகள் உள்ளிட்ட பல்வேறு விவாதங்கள் நேர்காணலில் விவாதிக்கப்பட்டன.
நேர்காணலின்போது தினகுரல் தமிழ் நாளிதழ் மற்றும் Sothern Mail ஆங்கில நாளிதழ் வளைகுடா முதன்மை நிருபரும் வணக்கம்பாரதம் வார இதழ் இணை ஆசிரியருமான நஜீம் மரிக்கா மற்றும் ஒளிப்பதிவாளர் சின்னா ஆகியோர் உடன் இருந்தனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments