பரணி கல்விக் குழும அறிவியல் திருவிழா..... கரூர் மாநகராட்சி ஆணையாளர் தொடங்கி வைத்தார்.....


பரணி கல்விக் குழுமத்தில் 2 நாட்கள் (01.11.23 & 02.11.23) அறிவியல் திருவிழா நடைபெற்றது. இதில் நிறைவு நாளான இன்று நடைபெற்ற பரணி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியின் குழந்தைகள் அறிவியல் திருவிழாவை கரூர் மாநகராட்சி ஆணையாளர்  K.சரவணக்குமார்  தொடங்கி வைத்தார்.  இதன் முதல் நிகழ்வாக நேற்று நடைபெற்ற பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் குழந்தைகள் அறிவியல் திருவிழாவை கரூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் பி.சரவணன் தொடங்கி வைத்தார். 

பரணி கல்விக் குழுமத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற அறிவியல் திருவிழாவில் வேளாண்மை, வாழ்விட வகைகள், கண்டுபிடிப்புகள், தொழிற்சாலைகள் வளர்ச்சி, மனித உடற்கூறியல் ஆய்வு உள்ளிட்ட  963 அறிவியல் படைப்புகள் மற்றும் ஆய்வுகள் 2993 இளம் அறிவியல் விஞ்ஞானிகளால் காட்சிப்படுத்தப்பட்டன. பரணி குழந்தை விஞ்ஞானிகளின் மெச்சத் தகுந்த அறிவியல் திறமையும் ஆங்கில அறிவும் பார்வையாளர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது. 

இவ்விழாவிற்கு பரணி கல்விக் குழுமத் தாளாளர் S.மோகனரங்கன்  தலைமை தாங்கினார்.  செயலர் பத்மாவதி  மோகனரங்கன்,  அறங்காவலர் M.சுபாஷினி முன்னிலை வகித்தனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் பரணிக் கல்விக் குழும முதன்மை முதல்வரும் தமிழக முன்னோடி கல்வியாளருமான முனைவர் C.ராமசுப்ரமணியன் தலைமையில் பரணி வித்யாலயா முதல்வர்  S.சுதாதேவி, பரணி பார்க் முதல்வர் K.சேகர், எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி முதல்வர் P.சாந்தி, துணை முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.  

குழந்தைகள் அறிவியல் திருவிழாவில் வியப்பூட்டும் அறிவியல் அரங்குகள், பாரம்பரிய உணவுக் கொண்டாட்டம், 2000 ஆண்டு பழமையான தமிழியில் பெயர் எழுதும் அரங்கு, ஜப்பான் பண்பாட்டு அரங்கம், மாணவர் ஓவியம் மற்றும் கலைப்பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.

புகைப்படம்: 

பரணி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியின் குழந்தைகள் அறிவியல் திருவிழாவை கரூர் மாநகராட்சி ஆணையாளர்  K.சரவணக்குமார் பார்வையிடும் நிகழ்வு. அருகில் தாளாளர் S.மோகனரங்கன், செயலர் பத்மாவதி  மோகனரங்கன்,  அறங்காவலர் M.சுபாஷினி, முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்ரமணியன், பரணி வித்யாலயா முதல்வர்  S.சுதாதேவி, பரணி பார்க் முதல்வர் K.சேகர், எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி முதல்வர் P.சாந்தி மற்றும் பலர்.


கரூர் மாவட்ட செய்தியாளர் 

எம். எஸ்.மோகன்ராஜ்

93857-82554

Post a Comment

0 Comments