• Breaking News

    சமூக ஆர்வலராக இருந்த மீமிசல் பத்திரிக்கையாளர் பதுர் ரஹ்மான் திடீர் மரணம்

     


    பல சமூகப் பணிகளை செய்து, பத்திரிக்கையாளராக இருந்த மீமிசல் பதுர் ரஹ்மான் திடீர் மரணம் அடைந்தார். 

    மீமிசல் அருகே உள்ள ஆர்.புதுபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் பதுர் ரஹ்மான். வயது 38. மீமிசலில் உணவகம் நடத்தி வந்தார். 2012 ம் ஆண்டு முதல்  பத்திரிக்கை துறையில் நிருபராக இருந்து வந்தார். இவர் குடிநீர், சாலை, மின்சாரம், மருத்துவம் போன்ற குறைகளை பத்திரிக்கை வாயிலாக வெளியிட்டு, குறைகளை நிவர்த்தி செய்து வெற்றி பெற்றார்.


     இவர் அனுப்பும் செய்திகள் உள்ளூர் பத்திரிக்கைகள், முக்கிய பத்திரிகைகள், தொலைக்காட்சி செய்திகள், சமூக வலைத்தளங்களிலும் பிரதிபலித்தது. சாதி, மதம் பாராமல் அனைத்து மக்களிடமும் இனிமையாக பழகக் கூடியவர்.     அனைத்து சமுதாய மக்களுக்காகவும், பல சமூகப் பணிகளுக்காக சேவை செய்தவர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பில் மாவட்ட பொருளாளர் பொறுப்பில் இருந்தவர். வரதட்சணைக்கு எதிராக உள்ளூரில் குரல் கொடுத்தவர். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தூங்கியவர் காலையில் நீண்ட நேரம் ஆகியும் எழுந்திருக்கவில்லை. 


    இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்கள் மருத்துவரை அழைத்து வந்து பார்த்தபோது அவர் மரணமடைந்தது தெரிய வந்தது. இதனால் குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மரணமடைந்த பத்திரிக்கையாளர் பதுர் ரஹ்மானுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது மறைவிற்கு பத்திரிகையாளர்கள் பலரும் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

    No comments