• Breaking News

    சர்வர் பிரச்சனை: ரேஷன் பொருட்கள் வாங்கமுடியாமல் மக்கள் தவிப்பு

     


    தீபாவளிப் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், ரேஷன் கடைகளில் முன்னதாகவே பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். அதற்கு ஏற்றாற்போல ரேஷன் கடைகளும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.



    இந்த நிலையில், பல பகுதிகளில் ரேஷன் கடைகளில் சர்வர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக இயந்திரத்தில் பில் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சர்வர் கோளாறால் ரேஷன் பொருட்கள் வாங்கமுடியாமல் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

    No comments