சாத்தூரில் கலைஞரின் பேனா அலங்கார ஊர்தி வருகை
சாத்தூர் வந்த முத்தமிழ்ரததிற்க்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.முன்னாள் முதல்-அமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளை தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடும் விதமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றான தமிழ்நாடு அரசின் எழுத்தாளர்-கலைஞர் குழுவின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு முத்தமிழ் தேர் வாகனமானது கடந்த 4ம் தேதி கன்னியாகுமாரியில் புறப்பட்டு நேற்று விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகருக்குக வந்தது.
முன்னதாக சாத்தூர் வந்த வாகனத்தை நகர எல்லையில் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், நகர் மன்ற தலைவர் மற்றும் நகர செயலாளர் குருசாமி,ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நிர்மலா கடற்கரைராஜ் வரவேற்றனர். பின்பு அங்கிருந்து கிளம்பிய முத்தமிழ் ஊர்தி முக்குராந்தால் பகுதியில் கட்சியினர்,பொதுமக்கள் , எட்வர்ட் பள்ளி அருகே மாணவர்கள் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் ஊர்தியின் உள்ளே வைத்திருக்கும் கலைஞரின் புத்தகம் மற்றும் அவருடைய திரு உருவ சிலைக்கு திமுக முக்கிய நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில், கோட்டாட்சியர் சிவக்குமார்,வட்டாட்சியர் லோகநாதன்,மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர்,முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் திருவேங்கடசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், மேற்கு ஒன்றிய செயலாளர் கடற்கரை ராஜ்,, நகராட்சி துணைத்தலைவர் அசோக்,மதிமுக நகர் மன்ற உறுப்பினர் மற்றும் நகர செயலாளர் கணேஷ்குமார், ஒன்றிய செயலாளர் மோகன், 19வார்டு பிரதிநிதி பாண்டி,நகர இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் சங்கர் ,பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments