• Breaking News

    மணமேல்குடி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா ஆய்வு


    புதுக்கோட்டை மாவட்டம்,மணமேல்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறை, அவசரகால சிகிச்சை பிரிவு,  செவிலியர் பற்றாக்குறை, மருத்துவமனை சுகாதாரமின்மை உள்ளிட்ட குறைகளை கடந்த 6 ந்தேதி நடந்த மக்கள் தொடர்பு முகாமில் மணமேல்குடி வணிகர் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

     

    இந்நிலையில் இன்று மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு திடீரென வருகை புரிந்த மாவட்ட ஆட்சியர் மெர்சி மருத்துவமனையின் அனைத்து பிரிவுக்கும்  சென்று, ஆய்வு செய்து, நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் வணிகர் சங்க நிர்வாகிகளிடம் குறைகள் அனைத்தையும்ம் சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 

    ஆய்வின்போது மணமேல்குடி தாசில்தார் சேக் அப்துல்லா, மணமேல்குடி இன்ஸ்பெக்டர் குணசேகரன், ஊராட்சி ஆனையர் அரசமணி,  வணிகர் சங்க நிர்வாகிகள் சாமியப்பன், தாஜ்புகாரி, வர்த்க சங்கதலைவர் கணேசன்  உள்ளிட்டோர்  உடன் இருந்தனர்.

    No comments