• Breaking News

    கோணமூலை ஊராட்சியில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் இடங்களை ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் நேரில் ஆய்வு செய்தார்


    ஈரோடு மாவட்டம் ,  சத்தியமங்கலம்  ஊராட்சி ஒன்றியம், கோண மூலை ஊராட்சியில் காந்திநகர் மாரியம்மன் கோவில் மெயின் வீதியில்  சிமெண்ட் கான்கிரீட் சாலை  அமைக்கும் இடங்களையும், பழுதடைந்த கழிவுநீர் வடிகால்களையும்  சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும், சத்தி தெற்கு  திமுக ஒன்றிய செயலாளர் கே. சி. பி. இளங்கோ  நேரில் பார்வையிட்டார். மேலும் இவர்களுடன், கோண மூலை ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன் (எ) பா.செந்தில்நாதன்,  ஒன்றிய துணை செயலாளர் டி.பி.அசோகன்,  பொறியாளர் ஜெயகாந்தன் மற்றும் திமுக உறுப்பினர்கள். கோவிந்தராஜ்,  விஜய்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.


     மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி .

    No comments