பச்சை நிறமாக மாறிய கடல்..... கொந்தளித்த மீனவர்கள்......
தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரை அருகே உள்ள மீன் அரவை ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் கடல் முழுவதும் பச்சை நிறமாக மாறியதால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கடலில் இறால், சிங்கி போன்றவற்றை வளர்த்து அதனை ஏற்றுமதி செய்யும் தொழிலில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அந்த பகுதியில் இயங்கும் மீன் அரவை ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் கடற்கரை முழுவதும் பச்சை நிறமாக மாறுவதாக மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் சிங்கி, இறால் போன்றவை வளர்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது என வேதனை தெரிவிக்கும் மக்கள், இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர். தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments