ஈரோடு வடக்கு மாவட்டம் திமுக மாணவர் அணி சார்பில் மாநில அளவிலான TNUSRB பயிற்சி வகுப்புகள்
திமுக தலைவரும் , தமிழ்நாடு முதல்வரின் நல்லாசியுடனும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும் , திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், காவலர் தேர்விற்கான 50 நாள் இலவச ONLINE பயிற்சி வகுப்புகள் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் தலைமையில்,
திமுக மாநில மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் வகுப்பினை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இதில் 1000-ற்கும் மேற்பட்ட போட்டி தேர்வர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை ஈரோடு வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் டி.கே.கிருபாகரன், துணை அமைப்பாளர்கள் என்.வினோத்குமார், கு.செந்தூர், மோ.நவீன்குமார், செ.சுதா, அன்பகம் சூரியா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி -9965162471 .
No comments