நாமக்கல் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு
நாமக்கல் மாவட்டம்,திருச்செங்கோடு நாமக்கல் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மேற்கு மாவட்ட சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு முன்னாள் மாவட்ட தலைவர் செந்தில் தலைமையில் நடைபெற்றது இதற்கு சிறப்பு விருந்தினராக பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சுதாகர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் அப்பொழுது அவர் தெரிவிக்கும்போது. வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கிறதோ அந்த கட்சிக்கு உடைக்க வேண்டும் எனவும். மேற்கு மாவட்டம் முழுதும் அனைத்து பயிலும் வார்டு கிராமம் நகரவாரியாக கிளைகள் அமைத்து கூட்டங்கள் நடத்த வேண்டும் எனவும். ஒவ்வொரு ஒன்றியம் வாரியாக பௌர்ணமி அன்றும் அமாவாசை அன்று கூட்டங்கள் கண்டிப்பாக நடத்த வேண்டும் எனவும் நாளை அன்புமணி ராமதாஸ் அவர்களின் பிறந்தநாள் விழாவை திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலில் காலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சுமார் 300 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுவதாகும் இதனை தொடர்ந்து குமாரபாளையம் நகரில் அமைந்துள்ள முனியப்பன் கோவிலில் சுமார் 500 பேருக்கு அறுசுவை உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த நிகழ்ச்சிகள் அனைத்து பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட செயலாளர் சுதாகர் தெரிவித்தார்.இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் சுதாகர், மாவட்ட தலைவர் மூர்த்தி, முன்னாள் மாவட்ட தலைவர் செந்தில். மாநில செயற்குழு உறுப்பினர் கணேசன், செந்தில், கே சி பழனிசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன் லோகநாதன், மாவட்ட துணைத்தலைவர் கந்தசாமி, சரவணன் மாவட்ட துணை செயலாளர்கள் முருகேசன், மாணிக்கம், கோடீஸ்வரன், சுப்பிரமணியம், மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திக், பசுமைத்தாயக செயலாளர் ராமசாமி. மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஜெ.ஜெயக்குமார் 9942512340
நாமக்கல் மாவட்டம்
No comments