எட்டு ஆண்டுகளாக தரம் உயர்த்தப்படாத பேருந்து நிலையம்...... ஆளும் திமுக அரசை கண்டித்து தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம்......
மைலம்பட்டி பேருந்து நிலையத்தில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தரம் உயர்த்தப்பட்ட மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அடிப்படை வசதிகள் செய்து தராதத்தை கண்டித்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மைலம்பட்டியில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. முன்பு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்த இந்த மருத்துவமனையானது கடந்த 2016 ஆம் ஆண்டு தாலுகா அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.
கடவூர் பகுதிகளில் உள்ள ஏராளமான பொதுமக்கள் மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
ஆனால் இந்த அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு எட்டு ஆண்டுகளாகியும் நோயாளிகளுக்கு எந்த வித அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி மருத்துவமனை நிர்வாகத்தினை மாவட்ட மருத்துவ நிர்வாகத்தினை கண்டித்து தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆல்வின், கடவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கரூர் மாநகர மாவட்ட செயலாளர் அரவை முத்து கரூர் புறநகர் மாவட்ட செயலாளர் சிவம் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளதாகவும், விபத்தில் சிக்குபவர்கள் இங்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டு முதலுதவி மட்டுமே செய்யப்படுவதாகும் மேலும் திருச்சி மற்றும் மணப்பாறை கரூர் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள், விபத்தில் சிக்கியவர்கள் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கின்றனர் இதனால் பலரும் மருத்துவமனை செல்லும் வழியிலேயே தங்களது உயிரை இழந்து வருவதாகவும், மருத்துவமனையில் நோயாளிகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமலும், இரவு நேரங்களில் வரும் நோயாளிகளை மறுநாள் காலை வருமாறு மருத்துவமனை ஊழியர்கள் கூறி வருவதாகவும் குற்றம் சாட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மருத்துவ மனை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்களையும் முடக்கப்பட்டனர்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த தேமுதிக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் மோகன்ராஜ்
93857. 82554
No comments