நான் முதல்வன் NSE அகாடமியின் சார்பாக நிதி ஹேக்கத்தான் மாபெரும் வினாடி வினா போட்டி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இடையே நடைபெற்றது.இப் போட்டியில் 57 கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இப் போட்டியில் நான்கு சுற்றுகளிலும் வெற்றி பெற்று கரூர் அன்னை மகளிர் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு வணிகவியல் பயன்பாட்டு துறை மாணவிகள் யாழினி, ஷாகினா, மனோரஞ்சிதம், ஆஷிதா பானு, சசிகலா ஆகியோர் மூன்றாம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களும்,ரூபாய் 25 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி முதல்வர் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர், நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவியர்கள் வாழ்த்தினர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் எம்.எஸ்.மோகன்ராஜ்
9385782554
0 Comments