சாத்தூர் அருகே பெண் காவலரை தாக்கிய கோவில் பணியாளர் கைது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் 1000க்கு மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம். இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது
இக்கோவிலில் நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அப்பையநாயக்கன்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் முதல் நிலை காவலரான A.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காளியம்மாள் (35) இருக்கன்குடி கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது கே.மேட்டுப் பட்டியை சேர்ந்த இருக்கன்குடி கோவிலில் செக்யூரிட்டியாக பணியாற்றும் மணிசங்கர் (21) என்ற இளைஞர் பெண் காவலரை திடீரென தாக்கியுள்ளார். இதனால் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது
இந்த நிலையில் இருக்கன்குடி போலீசார் மணிசங்கரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். போலீசார் நடத்திய விசாரணையில் மணிசங்கரும் காளியம்மாளும் சில ஆண்டுகளாகவே தொடர்பில் இருப்பது தெரிய வந்தது.
இதில் ஏற்பட்ட தகராறில் மணிசங்கர் பெண் காவலரை தாக்கியதும் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து இருக்கன்குடி காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் இருக்கன்குடி போலீசார் மணிசங்கரை கைது செய்து மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments