• Breaking News

    கரூரில் இரண்டாம் ஆண்டு கேரளா சமாஜம் சங்கம் சார்பில் ஓனம் திருவிழா


    தனியார் மண்டபத்தில்.ஓணம் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடினார்கள் சிறப்பு அழைப்பாளராக கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன்  கலந்து கொண்டு .மழலையர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கினார்.

    கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழா ஓணம். சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை, கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.


    கொல்லவர்ஷம் எனும் மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்களாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.மகாபலி என்ற மன்னர் போல்   வேடமடைந்து ,ஆசிர்வாதம் செய்தார்.ஓனம் திருவிழாவில் செண்டை மேளம் ,முழங்க அத்திப்பூ கோலமிட்டு.பாரம்பரியமான கேரள உடை அணிந்து நடனம் ஆடி ஒருவருக்கு ஒருவர் ஓனம் திருவிழாவை வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். "கானம் விற்றாவது ஓணம் உண்" என்ற பழமொழி ஓண சாத்யா என்ற உணவின் சிறப்பை கூறுகிறது. பல்சுவை உணவு  அருந்தி மகிழ்ந்தனர்.


    கரூர் மாவட்ட செய்தியாளர் மோகன்ராஜ்

    93857 82554

    No comments