• Breaking News

    சென்சார் செய்யப்படாத 'லியோ' படம்..... டிரெய்லரை வெளியிட்ட தியேட்டர்களுக்கு நோட்டீஸ்.....

     


    சென்சார் செய்யப்படாத லியோ படத்தின் டிரெய்லரை திரையரங்குகள் எப்படி வெளியிடலாம் என்று விளக்கம் கேட்டு மத்திய தணிக்கை வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் வரும் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் கடந்த 5-ம் தேதி வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே டிரெய்லர் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.



    சென்னையில் திரையரங்குகளில் லியோ டிரெய்லர் வெளியிடப்பட்டது. இதனால் ரோகிணி திரையரங்கில் சேர்கள் உடைக்கப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றன. டிரெய்லர் வெளியான பிறகு அதில் விஜய் பேசியிருந்த ஆபாச வார்த்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


    இது விவாதப் பொருளாகவே மாறிய நிலையில், பலரும் நடிகர் விஜய்க்கு கண்டனம் தெரிவித்தனர். மற்றொரு தரப்பினர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். யூடியூப் என்பதால் லியோ டிரெய்லர் அப்படியே வெளியிடப்பட்டது.


    ஆனால், சென்சார் செய்யாத டிரெய்லரை சென்னையில் உள்ள திரையரங்குகளும் வெளியிட்டன. இதனால் ஏராளமான ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்தனர். இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.



    சென்சார் செய்யப்படாத டிரெய்லரை திரையரங்குகள் எப்படி வெளியிடலாம் என்று விளக்கம் கேட்டு மத்திய தணிக்கை வாரியம் சம்பந்தப்பட்ட திரையரங்குகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது பெரும் குற்றம் எனவும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    No comments