நாகை அருகே வடுகச்சேரியில் தொடர் திருட்டால் பொது மக்கள் அச்சம்; கோவிலில் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுப்படும் முகமூடி கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரப்பரப்பு
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த வடுகச்சேரியில் சுமார் 1000 த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மர்ம நபர்கள் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் ஆடு, மாடு மற்றும் ஊராட்சிகளில் உள்ள மின் மோட்டார்கள், விவசாய நிலங்களில் உள்ள இன்சின்களை தொடர்ச்சியாக மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். மேலும் ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு இரவு நேரத்தில் கொள்ளையர்கள் தொடர் திருட்டில் ஈடுப்பட்டு வருகின்றனர் .
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆலங்குடி கோவில், கீழ்பாதி அரசு ஊழியரின் வீடு மற்றும் மல்லிகா என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளைர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த நிலையில் வடுகச்சேரி ஆதிபராசக்தி கோவிலில் இரவில் பூட்டை உடைத்து முகமூடி அணிந்த மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். கோவில் கருவரை பூட்டை உடைத்த போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வரவே கொள்ளை முயற்சியை கைவிட்டு இருச்சக்கர வாகனத்தில் 3 கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர். கோவிலில் பொருத்தப்பட்டருந்த சிசிடிவி கேமராவில் முகமூடி அணிந்தபடி கையில் ஆயுதத்துடன் கொள்ளையர்கள் திருட்டில் ஈடுபடும் காட்சியும், சிசிடிவி கேமராவை உடைக்கும் காட்சிகளும் பதிவாகி உள்ளது. தொடர்ச்சியாக கிராமத்தில் முகமூடி கொள்ளையர் திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டு வருவதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கும் கிராமத்தினர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும் காவல்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம் நிருபர் சக்கரவர்த்தி
புகைப்பட நிருபர் சுந்தரமூர்த்தி
No comments