• Breaking News

    அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு


    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் ஆலோசனைப்படி பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற வருகிறது.

    அதன்படி நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியம் நாவல் பட்டி ஊராட்சி நா.காட்டூர் பூத் எண் 205.-ல் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் ஈ. கே. பொன்னுசாமி, தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டாக்டர் வெ. சரோஜா, அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.ஒன்றிய கழக இணைச் செயலாளர் அமுதா, வரவேற்புரை ஆற்றினார்.

     அண்ணா தொழிற்சங்க செயலாளர் பி. ஜெகநாதன், மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


     ஜெ.ஜெயக்குமார் 9942512340 

    நாமக்கல் மாவட்டம்

    No comments