கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது இதனால் பாசன விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு காலை முதல் நீர்வரத்து வினாடிக்கு 636 கனடியாக இருந்த நிலையில் தற்போது நீர்வரத்து வினாடிக்கு 209 கன அடியாக குறைந்தது.
இந்த தண்ணீர் முழுவதும் டெல்டா பாசன பகுதிகளுக்காக காவேரி ஆற்றில் திறக்கப்பட்டது.மேலும் கீழ கட்டளை வாய்க்கால், தென்கரை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்கால் ஆகிய வாய்க்கால்கள் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பாசனத்திற்கு நீரின்றி பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மேலும் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதால் வரும் காலங்களில் பொதுமக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்கு நீரின்றி சிரமப்படும் நிலை உருவாகியுள்ளது என பொதுமக்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் எம். எஸ். மோகன்ராஜ்
93857-82554
0 Comments