• Breaking News

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தியின் உருவப் படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை


    மகாத்மா காந்தியின் 155-வது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



    இந்த நிகழ்வின்போது, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    No comments