மதுக்கடையை நிரந்தரமாக அகற்ற வேண்டும்...... போராட்டத்தில் இறங்கிய பாஜக.....
சேத்தூர் பேருந்து நிலையம் முன்பு மதுக்கடையை அகற்றக்கோரி பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. சேத்தூர் ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் இடையூறாக அமைந்துள்ள மதுக்கடை எண் 12112- ஐ நிரந்தரமாக அகற்ற கோரி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் சரவணத்துரை (எ) ராஜா, மாவட்டத் துணைத் தலைவர் ரமேஷ் தமிழ்ச்செல்வன், மாவட்ட செயலாளர்கள் தங்கராஜ்,மருத்துவர் டாக்டர் ராதா,பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் திருநாவுக்கரசு, முன்னாள் மாவட்ட செயலாளர் ஐயா ஞானபண்டிதன், ராஜபாளையம் வடக்கு ஒன்றிய தலைவர் சிவசக்தி, தெற்கு ஒன்றிய தலைவர் மாரிதுரை,பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் பூ மாலை ராஜா, மாவட்ட செயலாளர் மாதவன்,விருதுநகர் மேற்கு மாவட்ட விவசாய அணி சமூக வலைதள பொறுப்பாளர் கா.செல்வராஜ் போன்ற கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு போராட்டம் நடத்தினார்கள்.
அவர்களோடு இணைந்து அணியின் பிரிவு தலைவர்களும் பொறுப்பாளர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments