பீகாரை போன்று தமிழகத்திலும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த பாரத முன்னேற்றக் கழகம் வலியுறுத்தல்
பீகார் மாநிலத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இது குறித்து பாரத முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பாரதராஜா யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
பீகாரின் மொத்த மக்கள் தொகை 13 கோடியாகும் .இதில் யாதவர்கள் மட்டும் 14 சதவீதம்,அதாவது 1 கோடியே 82 லட்சம் பேர் உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதே போல் தமிழகத்திலும் ஜாதி வாரி கணக்கெடுப்புப்பணியை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினை பாரத முன்னேற்றக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments