முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஒரு கோடி பனை விதைகள் நடவு செய்யும் பணி
புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரையோரத்தில் கட்டுமாவடி முதல் அரசாங்கரை வரை 43 கிலோ மீட்டர் தூரம் அளவில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி, சீனியார் அன்பறிவகம் மற்றும் புன்னகை அறக்கட்டளை இணைந்து முன்னெடுத்து இப்பகுதிகளில் பனை விதைகளை நடவு செய்தனர்.
புதுக்கோட்டை திமுக தெற்கு மாவட்ட கழகச் செயலாளர்,சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று மணமேல்குடி ஒன்றியம் அம்மாப்பட்டினம் கடற்கரையோரத்தில் துவக்கிவைத்தார்கள். மேலும் சில இடங்களை பார்வையிட்டு பனைமரத்தின் பயன்களை பொதுமக்களுக்கு எடுத்து கூறினார்கள்.
வரலாற்று சிறப்பு மிக்க இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் .கே.ஆர்.ரஞ்சன்துரை,மணமேல்குடி ஒன்றிய பெருந்தலைவர் பரணி இ.ஏ.கார்த்திகேயன் அவர்கள், மணமேல்குடி ஒன்றிய துணைப் பெருந்தலைவர், மணமேல்குடி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர், திரு.எஸ்.எம்.சீனியார் அவர்கள், அம்மாபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஆர்.எம்.அஹமதுதம்பி அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
ஒரு கோடி பனைவிதைகள் நடும் பணியின் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் திமுக சுற்றுச்சூழல் அணி தலைவருமான ஆவுடை யூனுஸ் சீனியார் அவர்கள் வரவேற்புரையாற்றினார். நன்றியுரை சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் எஸ்.எம்.குமரேசன்.
இந்நிகழ்ச்சியில் நகர, பேரூர் ஒன்றிய பெருந்தலைவர்கள் - துணைப் பெருந்தலைவர்கள், நகர, பேரூர், ஒன்றிய செயலாளர்கள், அனைத்து அணியினர், பல்வேறு கட்சியினர், சமூக ஆர்வலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் - துணைத்தலைவர்கள், மாவட்ட ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம நிர்வாகிகள், ஜமாஅத் நிர்வாகிகள், நற்பணி மன்றம், பேரவை, அறக்கட்டளை நிர்வாகிகள், ஆசிரியர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் போன்றோர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு இம்மாவட்டத்திற்கு உட்பட்ட கடற்கரை ஓரங்களில் பனை விதைகளை நடவு செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை ஓரங்களில் பனை விதைகள் நடவு செய்த இடங்கள்:
1.கட்டுமாவடி
2.கிருஷ்ணாஜிப்பட்டினம்
3.கண்டனிவயல்
4.மும்பாலை
5.மணமேல்குடி
6.ஆவுடையார்பட்டினம்
7.அம்மாப்பட்டினம்
8.ஆதிப்பட்டினம்
9.வன்னிச்சிப்பட்டினம்
10.கோட்டைப்பட்டினம்
11.பாலக்குடி
12.குமரப்பன்வயல்
13.கோபாலப்பட்டினம்
14.சேமங்கோட்டை
15.முத்துகுடா
No comments