சாத்தூர் அருகே நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாக அலட்சியத்தால் தொடர் சாலை விபத்து
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா மேட்டமலை கிராமம் சாத்தூர் டு சிவகாசி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது இந்திரா காலனி இங்கு 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள், இவர்கள் வசிக்கும் பகுதி மெயின் சாலை என்பதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாகவும்,
இந்த பகுதி உள்ள மக்கள் தொடர்ந்து வேகத்தடை அமைக்க வேண்டும் என பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம், முறையிட்டும், அதை ஊராட்சி நிர்வாகம், சரியாக கவனம் செலுத்தாமல் மெத்தன போக்குடன் இருப்பதாகவும்,
இந்த சாலையில் மிக ஆபத்தான பகுதி மெதுவாக செல்லவும் என பலகை வைத்தும் அனைத்து வாகனங்களும் அதையும் மீறி 80 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த பகுதியை கடந்து செல்வதாகவும்,
பள்ளி சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் இந்த சாலையை கடப்பதற்கு மிகுந்த அச்சத்துடனேசெல்வதாகவும்,
நெடுஞ்சாலை துறை சார்பில், வைக்கப்பட்ட தடுப்பு கம்பிகளில் தரம் இல்லாமலும் ஒளிரும் ஸ்டிக்கர் இல்லாததாலும், இரவு நேரங்களில் தடுப்பு வேலி இருப்பதே தெரியாமல், வாகனங்கள் மோதி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும், ஊராட்சி நிர்வாகம் நெடுஞ்சாலை துறையும் விபத்து ஏற்படாதவாறு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர்.
No comments