மொடக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கலையரங்கத்தை மொடக்குறிச்சி எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்ட மன்ற தொகுதி, மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதி (2022-23) மூலம் ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கலையரங்கம் திறப்பு விழா நடைபெற்றது.இந்த
நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி கலந்து கொண்டு கலையரங்கத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இவ்விழாவில் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கணபதி, பேரூராட்சி வார்டு உறுப்பினர் செல்வி இளங்கோ, பாரதிய ஜனதா கட்சியின் மொடக்குறிச்சி வடக்கு ஒன்றிய தலைவர் ரெயின்போ கணபதி, பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், குளூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், பொதுப்பணித்துறை பொறியாளர்கள், அறம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் கிருத்திகா சிவ்குமார், பள்ளியின் ஆசிரியர்கள், மாணவியர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments