மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
மகாளய அமாவாசை என்பதால் வரும் 13-ம் தேதி சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மகாளய அமாவாசை அன்று புண்ணியஸ்தலமான ராமேஸ்வரத்திற்கு, தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்த மக்கள் சென்று தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.
இந்நிலையில் வரும் 14-ம் தேதி மகாளய அமாவாசை என்பதால் ராமேஸ்வரத்திற்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே வரும் 13-ம் தேதி, அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது.
சென்னை, சேலம், கோவை, பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு 13-ம் தேதியும், 14 - ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை, சேலம், கோவை, பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இதற்காக பயணிகள் www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
No comments