• Breaking News

    சென்னை துறைமுகத்தை நவீனமாக்க ரூ.74,000 கோடி ஒப்பந்தம்?

     


    மும்பையில் வரும் 17ம் தேதி முதல், 19ம் தேதி வரை நடக்கவுள்ள இந்திய கடல்சார் மூன்றாவது உச்சி மாநாட்டில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கும். இதில், 10 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடுகளை ஈர்க்க, மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. துறைமுகங்களை மேம்படுத்தவும், கப்பல் போக்குவரத்துத்துறையில் அதிநவீன தொழில்நுட்பங்களை புகுத்தவும், இந்த மாநாடு பெரிய அளவில் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    துறைமுகங்களை நவீனமாக்கி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, துறைமுகங்களை நவீனமாக்குதல், தொழில் நிறுவனங்களை ஊக்குவித்தல், துறைமுகங்களின் கட்டமைப்பு மேம்பாடு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஊக்குவிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், 27க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களை மேற்கொள்ளப்பட உள்ளன.


    சென்னை துறைமுகம், 74,000 கோடி ரூபாய் திட்டங்களுக்கு ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளது. இதில், 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம், கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதர முக்கிய ஒப்பந்தங்கள், கடந்த ஆகஸ்ட் மாதமே மேற்கொள்ளப்பட்டு உள்ளது.


    இதர முக்கிய ஒப்பந்தங்கள், மும்பையில் நடக்க உள்ள இந்திய கடல்சார் உச்சி மாநாட்டில் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    No comments