5 மாநில சட்டபேரவை தேர்தல்...... நவம்பர் 7 ஆரம்பம் டிசம்பர் 3 முடிவு..... தேர்தல் ஆணையம் அறிவிப்பு.....
அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதற்கு முன்னதாக சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவி காலம் இந்தாண்டுடன் முடிவடைகிறது. இதனால், இந்த மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் தேதி இன்று பிற்பகல் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7ம் தேதியும், சத்தீஸ்கரில் 2 கட்டங்களாக நவம்பர் 7 மற்றும் 17ம் தேதிகளிலும், மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 14ம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 23ம் தேதியும் மாற்றம் தெலுங்கானாவில் நவம்பர் 30ம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். மேலும், மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
No comments