எல்ஐசி ஊழியர் சங்க சேலம் கோட்ட 33-வது ஆண்டு பொதுக்குழு
எல்ஐசி பாலிசிதாரர்களையும் எல்ஐசி நிறுவனத்தை பாதிக்கின்ற இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் எல்ஐசி பிரிமியத்திற்கான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் பாலிசிதாரர்களுக்கு சிறப்பான சேவையை உறுதி செய்திட எல்ஐசி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும் எல் ஐ சி ஊழியர் சங்க சேலம் கோட்ட 33 வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.
எல் ஐ சி ஊழியர் சங்க சேலம் கோட்ட 33 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் கடந்த இரண்டு நாட்களாகதிருச்செங்கோடு நாடார் திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது. முதல் நாளான நேற்று மாநாட்டு துவக்கத்தை ஒட்டியும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை தெரிந்து கொள்ளும் வகையிலும் எல்ஐசி ஊழியர்கள் பேரணி நடத்தினார்கள் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்து துவங்கிய பேரணியை சென்னை கோட்டம் -2 ன் பொதுச்செயலாளர் தோழர். ஆர். சர்வமங்களா அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி மாநாடு நடக்கும் நாடார் திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து இன்று இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் எல்ஐசி பாலிசிதாரர்களையும் எல்ஐசி நிறுவனத்தை பாதிக்கின்ற இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் எல்ஐசி பிரிமியத்திற்கான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் பாலிசிதாரர்களுக்கு சிறப்பான சேவையை உறுதி செய்திட எல்ஐசி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும் பாலிசிதாரர்களுக்கு வழங்கும் பாலிசிக்கான போனஸ் தொகையை உயர்த்தி தர வேண்டும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும் குறிப்பாக பெட்ரோல் டீசல் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் 2010க்கு பிறகு பணியில் சேர்ந்துள்ள எல்ஐசி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டிற்கு சேலம் கோட்ட தலைவர் நரசிம்மன் தலைமை வகித்தார், பொதுச் செயலாளர் செந்தில்குமார் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.
மாநாட்டில் சேலம் கோட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஜெ.ஜெயக்குமார் 9942512340
நாமக்கல் மாவட்டம்
No comments