எஸ்டிபிஐ கட்சியின் நாகை மாவட்டம் சார்பாக நடைப்பெற்ற 2024 பாராளுமன்ற தேர்தல் பாகமுகவர்கள் ஆலோசனை கூட்டம்
நாகை மாவட்டம் சார்பாக 2024 பாராளுமன்ற தேர்தல் பாகமுகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று மாவட்ட தலைவர் அக்பர் அலி தலைமையில் நாகப்பட்டினம் ஃபுளு ஸ்டார் திருமண மஹாலில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்க்கு மாவட்ட செயலாளர் அபுஹாசிம் வரவேற்ப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் நாகை மாவட்ட பொதுச்செயலாளர் முஹம்மது யாமின் துவக்க உரை நிகழ்த்த சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் முஹம்மது பாரூக் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.2024 பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
வெல்லட்டும் மதசார்பின்மை என்ற தலைப்பில் வருகின்ற டிசம்பர் மாதம் மதுரையில் நடைபெறவிருக்கும் மாநில மாபெரும் மாநாட்டிற்க்கு நாகை மாவட்டம் சார்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த மாநாட்டில் பங்கு பெற வைக்க வேண்டும் அதற்கான பணிகளை நிர்வாகிகளும் செய்வீரர்களும் உறுப்பினர்களும் முன் நின்று மாநாட்டை வெற்றியடை செய்ய வேண்டுமாய் தீர்மானிக்கப்பட்டது.SDPI கட்சியில் அதிகமான உறுப்பினர்களை அனைத்து கிளைகளிலும் வார்டுகள் வாரிக சேர்க்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் தமீமுல் அன்சாரி தொகுத்து வழங்க,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முஹம்மது ரஷீது,முஹம்மது யூசுப்,நாகை சட்டமன்ற தொகுதி தலைவர் சகுபானுதீன்,துணைத்தலைவர் பகுருதீன்,பொருளாளர் ரியாஸ்,மாவட்ட ஊடக பொருப்பாளர் தாரிக்,சமூக ஊடக அணி ஒருங்கிணைப்பாளர் தன்ஸீர்,SDTU மாவட்ட தலைவர் சேக் அலாவுதீன்,வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ரஹ்மத்துல்லாஹ்,விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் சுலைகா,மாவட்டத் தலைவர் பசீரா கனி,பொதுச் செயலாளர் நஸ்ரின்,SDPI நாகை நகர தலைவர் நிஜாம் துணைத் தலைவர் கதீஜா மற்றும் கிளை நிர்வாகிகள்,செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.மேலும் புதிய உறுப்பினர்கள் பலர் தங்களை SDPI கட்சியில் இணைத்து கொண்டனர்.இறுதியாக மாவட்ட செயலாளர் கல்லார் மெய்தீன் நன்றியுரையாற்றினார்.
நாகப்பட்டினம் மாவட்ட நிருபர் சக்கரவர்த்தி
புகைப்பட நிருபர் சுந்தரமூர்த்தி
No comments