• Breaking News

    குத்தாலம் பேரூராட்சி சார்பாக 15 வார்டுகளிலும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தூய்மை பணியை மேற்கொண்டனர்


    நாடு முழுவதும் இன்று ஒரு மணி நேர தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு கூறியதை முன்னிட்டு  குத்தாலம் பேரூராட்சி சார்பாக 15 வார்டுகளிலும் 60 தூய்மை பணியாளர்கள் மற்றும் 450-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தூய்மை பணியை மேற்கொண்டனர் .இதனை பேரூராட்சி தலைவர் சங்கீதா மாரியப்பன் தொடங்கி வைத்தார்.பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் முன்னிலை வைத்தார் இந்த தூய்மை இயக்கத்தின் சார்பாக கழிவு நீர் வடிகால் சுத்தம் செய்தல் தூய்மைப்பணி வீடு வீடாக சென்று மக்கும் மக்கா குர்பைகளை பிரித்து தருவது குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் அளித்தல் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது இந்நிகழ்வில் பேருராட்சி மன்ற உறுப்பினர்கள் மாலதி கலியபெருமாள,ராதிகா சசிக்குமார்,சேகர்,மற்றும் இதற்கான ஏற்பாடுகளை பேரூராட்சி இளநிலை எழுத்தாளர் சுந்தர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    No comments