கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நத்தாமூர் கிராமத்தை சேர்ந்த மதுரைவீரன் என்பவர் மனைவி திரவியம் (42), குழந்தைகள் ரியாசினி (4), விஜயகுமாரி (3) ஆகியோருடன் வசித்து வந்தார். இவர் வீட்டின் ஒரு பகுதியில் சிமெண்ட் மற்றும் உரம் விற்பனை செய்து வந்தார்.
இந்நிலையில் வீட்டில் திரவியம், அவருடைய தந்தை பொன்னுரங்கம் (72), குழந்தைகள் ரியாசினி, விஜயகுமாரி ஆகிய நான்கு பேரும் கருகிய நிலையில் சடலமாக கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், நான்கு பேரின் உடலை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உறவினர்கள் விவேக் மிட்டல் (4), உறவினர் விஜயகுமார் (53) ஆகியோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விசாரணையில் திரவியம் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்துள்ளது. எனவே, அவர் தற்கொலை செய்து கொள்ள தீ வைத்த போது அனைவரும் அதில் சிக்கி உயிரிழந்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments