• Breaking News

    காவிரி கடைமடை பகுதியான நாகை மாவட்டத்தில் நீரின்றி சூல்கட்டும் பருவத்தில் உள்ள பயிர்கள் பதராகும் அவலம்


    ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 5.25 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் சுமார் 62 ஆயிரம் ஏக்கர் அளவிலான நிலப்பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள சூழலில், பல்வேறு பகுதிகளில் நீரின்றி அவை எரிந்தும்‌ அழிகியும் நாசமாகி உள்ளது. ஒரு சில இடங்களில் விவசாயிகள் டீசல் என்ஜின் கொண்டு நீரை வைத்து அவை தற்போது 70 நாட்கள்  வயதுடைய பயிராக உள்ளது.இவை அனைத்தும் வளர்ச்சிப் பருவத்தில் அதாவது பால் பிடித்து கதிர் வரும் தருவாயில் இருப்பதால், அடுத்த 25 முதல் 35 நாள்களிலிருந்து கதிர் முற்றி அறுவடைக்கு தயாராகிவிடும். எனவே, இப்பயிர்களுக்கு தற்போதைய சூழலில் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு தண்ணீர் தேவைப்படுகிறது.

    ஆனால், மேட்டூர் அணையில் நீர் இருப்பு மிகவும் குறைந்த அளவே உள்ளது. இதனால், குறுவை பயிரைக் காப்பாற்ற முடியுமா? என்ற அச்சத்துடன் விவசாயிகள் உள்ளனர். குறிப்பாக நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட கீழ்வேளூர் மற்றும் கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கருங்கண்ணி  மீனம்பநல்லூர்,வாழக்கரை,பகுதிகளிலுள்ள சுமார்  1500 ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் தண்ணீரின்றி வயல்கள் வெடிப்புற்று காணப்படுவதோடு சூல் கட்டும் பருவத்தில் உள்ள பயிர்கள் வளர்ச்சி குன்றி காணப்படுகிறது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குறுவை.  சாகுபடி செய்து பெரும் பொருட்செலவுக்கு மத்தியில் டீசல் இன்ஜின் கொண்டு நீர் இறைத்து பயிர்களை ஓரளவுக்கு காப்பாற்றியும் தற்போது நீரின்றி 70 நாள் பயிர்கள் காய தொடங்கி காய்ந்து வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் எவ்வாறு விவசாயிகளை பாதுகாக்க போகிறது. மேலும் மத்திய அரசு பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விட்டு இரு வேடம் போடுகிறது. ஏறக்குறைய ஏக்கர் ஒன்றுக்கு 20 ஆயிரத்திற்கும் அதிகமாக செலவு செய்துள்ள நிலையில் தற்போது உள்ள சூழலில் எவ்வாறு அவற்றை பெற போகிறோம் என தெரியாமல் தவித்து வருகிறோம்.இன்னும் 10 முதல் 20 நாட்களுக்குள் பலன் தரும் நிலையில் நீரின்றி நெற்பயிர்கள் கதிர் வந்தும் வராமலும் உள்ளது. இதனால் போதிய மகசூல் இன்றி நெல்மணிகள் பதராகும் அபாயம் உள்ளது. இதனால் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்படும் நிலையில் போர்க்கால அடிப்படையில் சரியான திட்டமிடல் வேண்டும். மேலும் தொடர்ந்து இதே நிலை நீடித்தால் சம்பா சாகுபடி கேள்விக்குறியாகும் நிலை உள்ளதோடு உணவிற்காக கையேந்தி நிலை ஏற்படும். மத்திய மாநில அரசு தனிக் கவனம் செலுத்தி விவசாயிகளை பாதுகாக்க பல்வேறு திட்டம் ஒதுக்குவது போல தற்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் மத்திய அரசு  உடனடியாக விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிர் காப்பீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும். மேலும் கடன் வாங்கி சாகுபடி செய்த விவசாயிகள் கடனை திரும்பப் பெற உரிய இழப்பீடு வழங்கினால் மட்டுமே விவசாயிகள் மீண்டும் சாகுபடி செய்ய முடியும் என்பது குறிப்பிடதக்கது.

    No comments