• Breaking News

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மணல்மேடு சதூர் வேதிமங்களத்தில் முக்கணி விநாயகருக்கு சிறப்பு யாகம் நடந்தது


    மயிலாடுதுறை மாவட்டம்,மணல்மேட்டை அடுத்துள்ளது சதூர் வேதிமங்களம் என்கிற புத்தமங்களம் கிராமம் இங்கு,அபிராமி உடனாகிய கிருபாலநாதர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முக்கனி விநாயகர் சிலை வைக்கப்பட்டு,மூன்று கால பூஜைகள் நடைபெற்று வந்தது.இன்று யாக குண்டம் அமைத்து,கனபதி ஹோமம், நவக்கிரக ஹோமம்,பூர்ணாகுதி நடைபெற்றது.பின்னர் புனிதநீர் அடங்கிய கலசங்கள் கோயிலை சுற்றிவலம் வந்து, 'பம்பை, மேள தாளம் முழங்க விநாயகருக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.இதில், இந்து தர்ம சேனா மாநில இயக்குனர் ராஜயோகி ராஜசிவம் சுவாமிகள் முன்னின்று செயல்பட்டு விழா ஏற்பாடுகளை செய்தார்.இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு,முக்கணி விநாயகரின் அருளை பெற்றனர்.

    No comments