மின்னல் தாக்கி விவசாயி சம்பவ இடத்திலேயே பலி
கடலூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். பலத்த காயம் அடைந்த 5 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம், சின்னகாரக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். விவசாயி ஆன இவர் வயலில் மேய்ந்து கொண்டு இருந்த தனது மாட்டை பிடிக்க சென்றுள்ளார். அப்போது, திடீரென மின்னல் தாக்கியது. இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதேபோல் கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே உள்ள ராமநாதன்குப்பம் பெருமாள் ஏரிக்கரையில் உள்ள ஆலமரம் ஒன்றியத்தில் மழைக்காக 5 பேர் ஒதுங்கி இருக்கின்றனர். அப்போது, திடீரென மின்னல் தாக்கியுள்ளது.இதில், வினோத்குமார், சகுந்தலா, வீரமணி, கருணாமூர்த்தி, சுதர்சன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து மின்னல் தாக்கி ஒருவரும், ஐந்து பேர் படுகாயம் அடுத்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
No comments