குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழக அரசின் முக்கிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்.15 அன்று நாளை மறுநாள் தொடங்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டம் தொடர்பாக இறுதிக்கட்ட பணிகள் குறித்து சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய முதல்வர், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் தொடக்க விழாவானது வரும் 15-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற இருக்கிறது.கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தகுதியானவர்கள். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1.06 கோடி பேருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும். தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய திட்டம் என்றால் இதுதான். இதனை வெற்றிகரமாக நடத்தி காட்டும் பொறுப்பும், கடமையும் அதிகாரிகளுக்கு இருக்கிறது. தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத்தொகை அவர்களது வங்கி கணக்கில் வரும் செப்.15 முதல் கிடைக்கும். மாதந்தோறும் வங்கி கணக்கில் ரூ.1000 உரிமைத்தொகை வரவு வைக்கப்படும்.இந்த திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.12,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார். இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. தகுதியுள்ளவர்கள் என நாம் தேர்ந்தெடுத்துள்ளது 1கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் எனவும் தெரிவித்திருந்தார்.தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் நாளை மறுநாள் தொடங்கப்பட உள்ளது.இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள் வங்கி கணக்குகளில் ஒரு ரூபாய் வரவு வைத்து சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், முதலமைச்சர் முக ஸ்டாலின் வருகையையொட்டி காஞ்சிபுரத்தில் ட்ரான் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் நாளை மறுநாள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ள நிலையில், ட்ரான் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்படுகிறது.
0 Comments