மதுபோதையில் வாலிபரை கட்டையால் அடித்துக்கொன்ற நண்பர்கள்
கோவை ஆடிஸ் வீதியில் ராஜேஷ் என்ற 47 வயது நபர் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (47). இவர் தனியாக தங்கியிருப்பதுடன், தினக் கூலி அடிப்படையில் சமையல் வேலை மற்றும் கட்டிட வேலைகளுக்கு சென்று வந்துள்ளார். நேற்று மாலை 6.30 மணிக்கு வேலைக்கு சென்றுவிட்டு ஆடிஸ் வீதிக்கு வந்த ராஜேஷ், சக நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட கைக்கலப்பில் ராஜேஷை உடன் இருந்தவர்கள் தலையில் கட்டையால் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக கூறப்படுகிறது.
இன்று காலை கடை திறப்பதற்காக வந்தவர்கள் ராஜேஷ் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவகலறிந்த ரேஸ் கோர்ஸ் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்பகை காரணமாக நடந்ததா அல்லது கொலைக்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்பது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments