• Breaking News

    மாணவியை கடத்தி மூன்றரை மாதங்களாக பலாத்காரம் செய்த வாலிபர்

     


    உத்தரப்பிரதேசத்தில் 17 வயது பள்ளி மாணவி வாலிபரால் கடத்தப்பட்டு மூன்றரை மாதங்களாக வெவ்வேறு மாநிலங்களில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரப்பிரதேச மாநிலம்,பல்லியா மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி, அதே கிராமத்தைச் சேர்ந்த அஜித் ராம்(21) என்பவரால் மே 29ம் தேதி கடத்தப்பட்டார். இதுகுறித்து மாணவியின் தாய்அளித்த புகாரின் பேரில், நாக்ரா போலீஸார் வழக்குப் பதிவு செய்து அஜித் ராமை தேடி வந்தனர்.இந்நிலையில், நர்ஹி கால்வாய் புலியா பகுதியில் பதுங்கியிருந்த அஜித் ராம் இன்று கைது செய்யப்பட்டதுடன் மாணவி அவரிடமிருந்து மீட்கப்பட்டார். இதுதொடர்பாக அஜித் ராம் மீது 363, 366 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.குஜராத்தில் உள்ள பரோடா, மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் ஆகிய இடங்களுக்கு மாணவியை அழைத்துச் சென்று மூன்றரை மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாக அஜித் ராம் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அவர் மீது 376 மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    மேலும், சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மாணவியைக் கடத்திச் சென்று மூன்றரை மாதங்களாக வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பல்லியா மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    No comments