பாரதிய ஜனதா கட்சியினர் அமைச்சர் உதயநிதி படத்தை செருப்பால் அடித்து அவமரியாதை செய்ததால் பரபரப்பு காவல்துறை குவிப்பு
திருச்செங்கோடு கைலாசநாதர் கோவில் அருகே சனாதன எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக ஆன்மீக ஆலய பாதுகாப்பு பிரிவு சார்பில் அதன் தலைவர் தலைவர் ராஜ்குமார் தலைமையில் கட்சியின் மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலக முற்றுகை போராட்டம் அமைச்சர் உதயநிதி படத்தை செருப்பால் அடித்து அவமரியாதை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கைலாசநாதர் கோவில் வளாகம் முழுவதும் போலிசார் குவிக்கபட்டதால் பரபரப்பு.போராட்டத்தில் பாஜக நிர்வாகிகள் மகேஸ்வரன் தினேஷ்குமார் பாலமுருகன் ரமேஷ் ஈஸ்வரன் சசி தேவி பழனிச்சாமி பூங்குழலி எட்டு பெண்கள் உள்பட 70 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.
செய்தி பிரிவு. ஜெ.ஜெயக்குமார் 9942512340 நாமக்கல் மாவட்டம்
No comments