• Breaking News

    கரூரில் அதிரடி காட்டிய அமலாக்கத்துறை..... தெறித்து ஓடிய மணல் கொள்ளையர்கள்.....


    தமிழக அளவில் போலி பில் மற்றும் போலிக்கு க்யு ஆர் கோடுகளை வைத்து மணல் திருட்டு அரங்கேறி வந்த நிலையில் இன்று அமலாக்க துறையினர் அதிரடி சோதனை நடத்தினார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மணல் மாஃபியாக்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் தீவிர சோதனை நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாவட்டம், மன்மங்கலம் அடுத்த நல்லம்பாளையம் பகுதியில் நடைபெற்று வந்த அரசு மணல் குவாரி இன்று வெறுச்சோடி காணப்படும் நிலையில் அமலாக்க துறையினர் சோதனையை அடுத்து முன்னறிவிப்பு இன்றி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் அமலாக்கத் துறையினர் குவாரிக்குள் வந்துவிடக் கூடாது என்பதற்காக போக்லின் இயந்திரம் விட்டு குழி பறித்து போட்டுள்ளனர். மேலும் இங்கிருந்து அள்ளப்பட்டு கணபதி பாளையம் நன்னியூர் ஆகிய பகுதிகளில் ஸ்டாக் பாயிண்ட் மூலம் விற்கப்பட்ட நிலையில் அங்கேயும் முன்னறிவிப்பு இன்றி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    அரசு மணல் குவாரி என்று கூறப்பட்டு வந்த நிலையில் அமலாக்கத் துறையினர் சோதனையை அடுத்து ஏன் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் முன்னறிவிப்பு இன்றி விடுமுறை அளிக்கப்பட்டது ஏன் என்று குழப்ப நிலையில் சமூக நல ஆர்வலர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் உள்ளனர். மேலும் போலி கியு ஆர் கோட்,  போலி முத்திரை என போலியான முறையில் மணல் விற்பனையகத்தில் பணம் பெற்ற ஆவணங்கள் மற்றும் ரசீதுகள் முற்றிலும் மறைக்கப்பட்டுள்ளன.


    கரூர் மாவட்ட நிருபர்

    மோகன்ராஜ்

    9385782554

    No comments