• Breaking News

    வடகிழக்கு பருவமழை துவங்குவதை தொடர்ந்து கரூரில் வெள்ளப்பெருக்கு மற்றும் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது


    கரூர் மாவட்ட தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    கரூர் மாவட்டத்தில் காவிரி ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகளான அமராவதி, நொய்யல் ஆறு, பொன்னணி ஆறு உள்ளிட்ட ஐந்து ஆறுகள் உள்ளடக்கிய கரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்கள் துவங்கியதை ஒட்டி வெள்ளப்பெருக்கு மற்றும் எதிர்பாராத விதமாக ஏற்படும் தீ போன்ற அசம்பாவித. நிகழ்வுகளால் பொதுமக்கள் தங்களை தாங்களே எளிய முறையில் எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஒத்திகை நிகழ்வு செயல்முறை விளக்கத்தோடு கரூர் மாவட்ட தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினார்.

    இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மற்றும் அரசு ஊழியர்கள் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவியர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வை சிறப்பாக செயல்முறை விளக்கத்தோடு செய்து காட்டிய தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களும் வெகுவாக பாராட்டினர்.


    கரூர் மாவட்ட செய்தியாளர்.

    மோகன் ராஜ்.

    93857 82554

    No comments