• Breaking News

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்


    ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் அனைத்து கட்சி சார்பில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு  கொலை மிரட்டல் விடுத்த உத்திரப்பிரதேச சாமியார் பரமஹன்ஸ் ஆச்சார்யாவை கைது செய்ய வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

      நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பெ.பொன்னுசாமி தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி பவானிசாகர் சட்ட மன்ற தொகுதி செயலாளர் பொன்.தம்பிராஜன், தமிழ் புலிகள் கட்சி மண்டல நிதி செயலாளர் ப.அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாநில தொண்டரணி செயலாளர் பவானி முகம்மது, திராவிடர் கழக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மு.சென்னியப்பன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி திருப்பூர் குணா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் திருத்தணிகாச்சலம் , இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின் சிவக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சத்தி நகர தலைவர் ச.ம.சிவக்குமார் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சத்தி தாலுக்கா செயலாளர் விஜயகுமார், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம், எஸ் டிபிஐ கட்சி மாவட்ட பொது செயலாளர் ஏ.சமீருல்லா, தமுமுக மாவட்ட செயலாளர் ஆட்டோ தாஜ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சத்தி நகர தலைவர் முகமது கான் , மனிதநேய ஜனநாயக கட்சி இர்ஃபான், பல்சமய நல்லுறவு இயக்கம் ஆசிப்,  தமிழ் சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொது செயலாளர் இரா.குணசேகரன், புரட்சிகர இளைஞர் முன்னணி சத்தி பாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் நில உரிமை மீட்பு இயக்கம் மாவட்ட அமைப்பாளர் சாமிநாதன், சத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் ப.பெரியகாளையன், சத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆ.கு.சுப்பிரமணியன் , சத்தி நகர செயலாளர் சிறுத்தை மூர்த்தி, சத்தி நகர துணை செயலாளர் தனுசுராஜ், சத்தி தெற்கு ஒன்றிய துணை செயலாளர் திருமாபிரபு, சத்தி தெற்கு ஒன்றிய துணை செயலாளர் சீத்தாராமன், பவானிசாகர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் விஜயன் , சத்தி நகர மூனுவீடு பத்திரன், சத்தி நகர மூனுவீடு வெற்றி கொண்டான் .

    இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும்,நிர்வாகிகளும் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.இதில் சாமியாரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதில் திரளாக பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

    No comments