• Breaking News

    கொத்து புரோட்டா கேட்டு மாஸ்டரை கொத்து புரோட்டா போட்ட 'குடிமகன்கள்'

     


    திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே ஹோட்டலில் கொத்து புரோட்டா கேட்டு 6 பேர் கொண்ட கும்பல் புரோட்டா மாஸ்டரை சரமாரி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வத்தலகுண்டு – பெரியகுளம் சாலையில் இம்தாதுல்லா (32) என்பவர் பிரியாணி ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் அருந்தி விட்டு 6 பேர் கொண்ட கும்பல் ஹோட்டலுக்கு வந்தது.அப்போது கடையில் இருந்த மாஸ்டரிடம் கொத்து புரோட்டா கேட்டு அவர்கள் தகராறு செய்துள்ளனர். இது பிரியாணி ஹோட்டல், கொத்து புரோட்டா போடுவது இல்லை என்று மாஸ்டர் கூறியுள்ளார்.ஆனால் அதை கேட்காத போதை கும்பல் மாஸ்டர் முத்துவை சரமாரியாக தாக்கியது. அதுமட்டும் இல்லாமல், ஹோட்டலின் சேர், டேபிள், பாத்திரங்களை அடித்து உடைத்தனர். இதைப்பார்த்த வாடிக்கையாளர்கள் அச்சம் அடைந்து அங்கிருந்து ஓட்டம் எடுத்தனர்.பின்னர் அந்த போதை கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதையடுத்து மாஸ்டர் முத்து வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் 6 பேர் கொண்ட கும்பல் கொத்து புரோட்டா கேட்டு தகராறில் ஈடுபட்டு மாஸ்டரை சரமாரியாக தாக்கிய சி.சி.டிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

    No comments