• Breaking News

    கரூரில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது


    கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து மாவட்ட செயலாளர் நாட்ராயன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது இதில் விலைவாசி உயர்வு, வேலையின்மை திண்டாட்டம், கைத்தறி உட்பட சிறு குறு தொழில்கள் முடக்கம், தொழிலாளர் மற்றும் விவசாயிகள் விரோத சட்டங்கள், மாணவ மாணவிகளை தற்கொலை செய்ய வைக்கும் நீட் தேர்வு, ஆளுநரின் செயல்பாடுகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.


    கரூர் மாவட்ட நிருபர்

    மோகன் ராஜ்

    9385782554

    No comments