தந்தையை சந்தித்து நலம் விசாரித்த நடிகர் விஜய்
அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியவுடன், நடிகர் விஜய் பாசம் பொங்க, ‘எப்படி இருக்கீங்க அப்பா...’ என தனது பெற்றோரை சந்தித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
'லியோ' படப்பிடிப்பை முழுவதும் முடிந்த நிலையில், நடிகர் விஜய் தற்போது 'தளபதி 68' படத்தில் பிஸியாக உள்ளார். இந்த படத்தின் டெஸ்ட் ஷுட்டிற்காக கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்தார்.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இயக்குநர் எஸ்ஏசி இதயத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தந்தைக்கு அறுவை சிகிச்சை என தகவல் தெரிந்து, நடிகர் விஜய் உடனடியாக அமெரிக்காவில் இருந்து கடந்து இரு நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய நடிகர் விஜயின் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகியன. இந்நிலையில் இந்நிலையில் தனது தந்தையை அமெரிக்காவிலிருந்து திரும்பிய விஜய் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
தாய் தந்தையுடன் நடிகர் விஜய் இருக்கும் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய்க்கும் எஸ் ஏ சிக்கும் முட்டல் மோதல் என கருத்துக்கள் பரவி வந்த நிலையில் தனது தந்தையுடன் சமாதான போக்கை கடைபிடிக்கும் விதமாக நடிகர் விஜய் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.
No comments