பனையம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம், பனையம்பள்ளி ஊராட்சியில் , பனையம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் பவானிசாகர் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ். மகேந்திரன் கலந்து கொண்டு மாணவ , மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் ஒன்றிய துணை செயலாளர் புஷ்பா சின்னசாமி , பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆறுமுகம் , ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஏ.வேலுச்சாமி , மாவட்ட கழக பிரதிநிதி ஓ.சரவணகுமார் , ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தர்மன் , கவிதா பாண்டியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ் , கிளை கழக செயலாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி -9965162471 .
No comments