நிழல் தரும் மரங்களை வெட்டுவது குற்றமே...! சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
நாகை மாவட்டம் முழுவதும் மாதந்தோறும் மின் பராமரிப்பு செய்து மரக் கிளைகளை வெட்டுவது வழக்கம் அதன் ஒரு பகுதியாக பாலையூர் ஊராட்சியில் நேற்று (18.09.2023) மின் பராமரிப்பின் காரணமாக சாலையோரங்களில் உள்ள நிழல் தரும் மரங்களை மின்சார ஊழியர்கள் மின் கம்பிகளில் உரசும் மரங்களில் உள்ள கிளைகளை அடியோடு வெட்டி சாய்த்தது மிகவும் மனதுக்கு வேதனையை தருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதிலும் உள்ள ஒவ்வொரு ஊராட்சியும் மரக்கன்றுகளை வைத்து அதற்கு பாதுகாக்கும் வகையில் கூண்டுகளை அமைத்து தண்ணீர் ஊற்றி வளர்த்து வருவது அரசின் நோக்கமாகும்.
ஆனால் இந்த பாலையூர் ஊராட்சியில் இப்படி செய்ததற்க்கான காரணம் என்ன? மின் செயற் பொறியாளர் இதற்கு பதில் சொல்ல வேண்டும்? கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம் ?என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகை மாவட்ட நிருபர் சக்கரவர்த்தி
No comments