• Breaking News

    மயான வசதி கேட்டு மார்க்கிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


    திருச்செங்கோடு ஒன்றியத்துக்குட்பட்ட ஆனங்கூர் ஊராட்சி மன்றம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட  கட்சி  (மார்க்கிஸ்ட்), மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில்  அண்ணா நகர் கிளைகளின்  சார்பில் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு வாலிபர் சங்கத்தின் ஒன்றிய குழு செயலர் எம்.சூர்ய பிரகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

    ஆனங்கூர் கிராமம்,அண்ணா நகரில் சுமார் 300க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றனர் பல வருடங்களாக மயான வசதி இல்லாமல் ஓடையில் சடலங்களை வைத்து வரும் அவல நிலை உள்ளது.  மழை காலங்களில் சடலங்களை புதைக்கவும், எரிக்கவும், முடியாமல் பல்வேறு இன்னல்களை மக்கள் சந்தித்து வருகின்றார்கள். இந்த அவலத்தை பல முறை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு மனு கொடுத்தும் பஞ்சயாத்து நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதோடு சேர்த்து மற்றொரு கோரிக்கையான   ஆனங்கூர் ரயில்வே கேட் அருகில் இருப்பதால், கேட் திறந்ததும், இருசக்கர வாகனம் மற்றும் வாகனப் போக்குவரத்து வேகமாகவும் அதிகமாகவும் வருவதால் அடிக்கடி விபத்துகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 


    கடந்த வாரத்தில் 2 விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதை தடுக்கும் வகையில் சாலைகளில் வேகத்தடை அமைக்க  வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.அண்ணாநகர் கிராமத்திற்கு மயானத்திற்கு இட  வசதி வேண்டியும் கிராம நிர்வாக அலுவரிகளிடம்,  பஞ்சாயத்து நிர்வாகத்தை கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இதில் மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆர்.மனோகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் ஆர். வேலாயுதம், நகர செயலாளர் ஐ.ராயப்பன், ஒன்றிய குழு உறுப்பினர் ஸ்ரீனிவாசன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர்  மணிகண்டன், வாலிபர் சங்க முன்னாள் தலைவர்கள்  ஜி.மோகன்குமார், ஆர்.ராஜசேகரன் , கிளை செயலாளர் தமிழ்செல்வன், மற்றும் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள்,எம்.நாகராஜன்,சி.என்.முருகேசன், மற்றும் 30 பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு கிராம நிர்வாக அலுவலர்(பொறுப்பு) மற்றும் பஞ்சாயத்து தலைவரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இறுதியாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டர்வர்களுக்கு குருசாமி அவர்கள் நன்றி கூறினார்.


    ஜெ.ஜெயக்குமார் 

    நாமக்கல் மாவட்டம் 9942512340


    No comments