குத்தாலத்தில் எல்ஐசி 67 ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
மயிலாடுதுறை எல்ஐசி கிளையின் சார்பாக எல்ஐசி 67 ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு குத்தாலம் கடைவீதியிலிருந்து எல்ஐசி இன்சூரன்ஸ் சம்பந்தமான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.மயிலாடுதுறை முதுநிலை கிளை மேலாளர் ராஜேந்திரன் தலைமையில்.செம்பனார்கோவில் கிளை மேலாளர் சிவகடாட்சம்,தரங்கம்பாடி கிளை மேலாளர் பரமசிவம்,ஆகியோர் முன்னிலையில்.சிறப்பு அழைப்பாளராக குத்தாலம் காவல் நிலைய ஆய்வாளர் ஜோதிராமன் கலந்து கொண்டு எல்ஐசி விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தனர்,இதில் குத்தாலம் பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன்,வணிகர் சங்க தலைவர் சாமி செல்வம்,துணை தலைவர் அருள்,ஆகியோர் கலந்து கொண்டனர்,குத்தாலம் கடைவீதியிலிருந்து புறப்பட்ட பேரணியானது முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று பின்னர் மீண்டும் கடைவீதியை வந்தடைந்தது. பேரணியில் தன்விருத்தி என்ற ஒற்றை பிரிமியம் திட்டம் 30 9 2023 அன்று முடிவு அடைவதால் திட்டத்திற்கான பதாகைகளை ஏந்தி சென்றனர். நிறைவு விழாவில் ரோட்டரி சங்கத் தலைவர் ராஜலிங்கம் வாழ்த்துரை வழங்கினார், கம்பர் கழகத் தலைவர் நடராஜன் சிறப்புரையாற்றினார் தொடர்ந்து முகவர்கள் சங்க பொருளாளர் இராஜமாணிக்கம் வரவேற்புரையாற்றினார், முகவர்கள் சங்க செயலாளர் சின்னராசு நன்றியுரையாற்றினார்,நிகழ்ச்சி ஏற்பாடுகளை லோகநாதன்,சந்தானம், சுவாமிநாதன்,காளிதாஸ், ஆனந்தன், சுந்தரேசன்,ரவிச்சந்திரன், தங்கமலர், கடை முத்துக்குமாரசாமி, மரியந்து வான் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியில் வளர்ச்சி அதிகாரிகள் அலுவலக பணியாளர்கள் மற்றும் முகவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments