சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு விஞ்ஞான் பிரதிபா விருது
சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு விஞ்ஞான் பிரதிபா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது.
நிலவில் ஆய்வு செய்வதற்காக, ஜூலை 14-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, சந்திரயான் – 3 விண்கலத்தை இஸ்ரோ செலுத்தியது.அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை 6:04 மணியளவில், திட்டமிட்டபடி விகர் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் லேண்டரில் இருந்த 'பிரக்ஞான் ரோவர்' வெற்றிகரமாக நிலவில் இறங்கி, ஆய்வுகளை மேற்கொண்டது.அறிவியல் உலகில், 'சந்திரயான் - 3' வெற்றி மிகப்பெரிய உச்சத்திற்கு நம் நாட்டை உயர்த்தி உள்ளது. இந்த மகத்தான வெற்றிக்கு காரணமான விஞ்ஞானிகளில், திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் என்ற தமிழரும் ஒருவர். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், அவருக்கு மத்திய அரசு உயரிய விருது வழங்கி கவுரவித்துள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் மற்றும் விக்யான் பாரத் ஏற்பாடு செய்த பத்தாவது அறிவியல் கண்காட்சி போபலில் நடைபெற்றது.
இதில் சந்திரயான் 3 திட்டத்தை இயக்குனர் வீரமுத்துவேல் மற்றும் வந்தே பாரத் ரயில் உருவாக்கத்தில் ஈடுபட்ட பெரம்பூர் ஐ.சி.எப் தொழிற்சாலையின் முன்னாள் இயக்குனர் மணி ஆகியோருக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் உயரிய விருதான விஞ்ஞான பிரதிபா விருது வழங்கிய கௌரவிக்கப்பட்டது.
No comments